முருகன் App
குன்றக்குடி முருகன் திருப்புகழ்ப் பதிகம்
தண்டபாணி சுவாமிகள்
மயிலொக் கும்பொற்5 / 14
குன்றக்குடி முருகன் திருப்புகழ்ப் பதிகம் · தண்டபாணி சுவாமிகள்

மயிலொக் கும்பொற்

4✓
மயிலொக் கும்பொற் பிலகப் பெறுமவர்
கயலைக், கஞ்சத் துணையைப், பிணையினை
வடுவைப், பங்கப் படவிட் டெமனிகர் - விழிமானார்
வலியக் கொஞ்சிச் சருவித் துகில்பொதி
களபக் கொங்கைக் கிரிசற் றொளிர்தர
வரும்இத் துன்பக் கடலிற் சுழல்வது - தவரேனோ
வெயில்கக் குஞ்சத் தியையமுத் தலையினை
வயிரத் துங்கப் படையைக் கரமதின்
மிசைவைத் தம்பொற் சிகியிற் சிறுதுவர் - மலைபோலே
விழைவுற் றின்சொற் கிளியைச் சதமகன்
அருமைக் கொம்பைத் தழுவித் தினமுமென்
விழிமுற் கொஞ்சித் திகழச் சிறிதுளம் - இசைவாயே!
கயிலைக் குன்றத் தினர்சிற் சபைநடு
நடமிட் டும்பர்க் கருளைப் பொழிபவர்
கனலைச் செங்கைக் கமலத் தணிபவர் - தருபாலா
கடினக் கும்பத் தனஉத் தமிபரை
இமயத் தின்புத் திரிபெற் றருளிய
கரடத் தந்திக் கடவுட் குடன்வரு - துணைவோனே!
சயிலத் தொன்றைக் குடையிற் கொளுமவன்
வருமச் சிந்தைத் தகுவர்க் கொருபகை
தவளப் பொங்கக் கடலைக் கடைபவன் - மருகோனே
தரளக் கும்பற் கழனித் துழனியில்
வளைகட் கெண்டைத் திரள்மற் பொரமிளிர்
தருநற் குன்றக் குடியிற் குலவிய - பெருமாளே.