முருகன் App
குன்றக்குடி முருகன் திருப்புகழ்ப் பதிகம்
தண்டபாணி சுவாமிகள்
நன்றைக்கருத் தூடும்எ8 / 14
குன்றக்குடி முருகன் திருப்புகழ்ப் பதிகம் · தண்டபாணி சுவாமிகள்

நன்றைக்கருத் தூடும்எ

7✓
நன்றைக்கருத் தூடும்எ ணேன்,பொருள் - மயலாலே
நஞ்சொத்தகட் பாவையர் தீங்கனி - இதழார்வேன்
ஒன்றைக்குறித் தோரொடு வீண்பல - பகர்தீயேன்
உன்பொற்பதச் சேவையை வேண்டுதல் - உறுவேனோ
கன்றைக்கனிக் காஎறி வான்திரு - மருகோனே
கஞ்சப்பொகுட் டான்அழ மூண்டெரி - சினவேளே
கொன்றைச்சடைத் தேசிகர் ஈன்றருள் - புதல்வோனே
குன்றக்குடிக் கோயிலில் வாழ்ந்துள - பெருமாளே.