முருகன் App
மாவைச் சித்திரகவித் திருவிரட்டை மணிமாலை
தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை
அக்கர சுதகம்11 / 14
மாவைச் சித்திரகவித் திருவிரட்டை மணிமாலை · தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை

அக்கர சுதகம்

15வெண்பா✓
பதிமாவை யார்மகிழும் பூஞ்சோலை பார்த்தி
முதலெழுத்தற் றாற்காற் றதினு — முதலற்றாற்
காடா மதின்முன் கழிந்தால் வணக்கமாஞ்
சேடமுன்னொற் றற்றானீர் செப்பு.
16கலித்துறை✓
(அறுசீரடி ஆசிரியவிருத்தமுமாம்)
செப்பும் பரிசொன் றறியேன்
றென்வா ரிதிசே ரிலங்கை
வைப்பின் றிகழு மகுட
மாவைத் தனிவாழ் குகனே
அப்பின் வலிசா ரவுண
னங்கத் துணியாண் டருள்வா
யெப்பண் புரைசெய் திடினு
மீவாய் மிகுமா தரவே.