முருகன் App
மாவைச் சித்திரகவித் திருவிரட்டை மணிமாலை
தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை
கரந்துறைச் செய்யுள்12 / 14
மாவைச் சித்திரகவித் திருவிரட்டை மணிமாலை · தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை

கரந்துறைச் செய்யுள்

17வெண்பா✓
மாதரும வேரணிமா மாலையைய நன்காகு
நாமபர னேநா மயக்கமின் — றாகந
மல்லற்பா டேதமு மேக நயமதா
நல்லியன் மாபதமே தா.
✓
இதிற் கரந்த கவி வஞ்சித்துறை
தமரமாவையன், குமரநாயகன்
கமலபாதமே, நமநலின்பமே.
18கலித்துறை✓
(கலிவிருத்தமுமாம்)
தாமரைநன் மலர்வேதன் மயல்கொடனி மறையை
வாமமுனி மனநல்கு மலரகித வடிவன்
தாடுகுக னிருபாத சலசமலர் சரண
மாமருள்செய்· தனிமாவை யடைகுதிநீ யுளமே.