முருகன் App
மாவைச் சித்திரகவித் திருவிரட்டை மணிமாலை
தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை
மாத்திரைச் சுருக்கம்9 / 14
மாவைச் சித்திரகவித் திருவிரட்டை மணிமாலை · தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை

மாத்திரைச் சுருக்கம்

11வெண்பா✓
மூவெழுத்தோர் புட்பேர் முதலட் சரங்குறுகின்
மாவெறிந்த மாவையன்பேர் மத்திகுறி—லாவெழுதின்
வாசந்திப் பேர்முதலு மத்தியெழுத் துங்குறுகிற்
பேசு நகரியென்று பேர்.
12கலித்துறை✓
(எழுசீரடி ஆசிரிய விருத்தமுமாம்)
பேசி யம்பொன் வண்ண வேலர்
பெருமை யன்பின் வண்ணமே
யாசி லன்பின் மல்கு சென்னி
யணித லுற்றங் கைகளைக்
காசி யொத்தல் கொண்ட மாவை
கடலி னற்கங் கையினான்
மாசி னீத்துண் மல்கு மன்பின்
வடிவ மாமா வையமே.