முருகன் App
மாவைச் சித்திரகவித் திருவிரட்டை மணிமாலை
தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை
பிறிதுபடு பாட்டு3 / 14
மாவைச் சித்திரகவித் திருவிரட்டை மணிமாலை · தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை

பிறிதுபடு பாட்டு

3வெண்பா✓
(கலிவிருத்தமுமாம்)
வண்டண்டு நீப மலர்மாலை மார்பன்
கண்டண்டு மென்சொல் கயமாது கண்டன்
செண்டண்டு மாவை நகரமிது வென்றே
விண்டண்டு தேவர் விலகில்லர் சூழ்ந்து.
4கலித்துறை✓
(இரட்டைநாக பந்தம்)
சூழம் பொடும்பனி யாறூ றலைமலைத் துன்றுநனீர்
தாழம் புததியிப் பொன்மாவை மாட்டு நனிநிற்பதுட்
டாழன்பி னீர்வரும் போகங்க டாம்பயி றாம்பிடுவே
றூழற் றுறுமன் பொருகருத் தார்வந் தரும்விழவே.