முருகன் App
மாவைச் சித்திரகவித் திருவிரட்டை மணிமாலை
தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை
மாலைமாற்று13 / 14
மாவைச் சித்திரகவித் திருவிரட்டை மணிமாலை · தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை

மாலைமாற்று

19வெண்பா✓
(ஈறு தொடங்கியும் படிக்க)
நீபா சரவணச தேச நிகழய
வாகா ருடமா நயமேவை — மாமாவை
மேயந மாடரு காவா யழகநிச
தேச ணவரசபா நீ.
20கலித்துறை✓
(கலிப்பாவுமாம்)
நீர்த்தரங்கக் கடன்மாவை நிற்பாரை நிறைமதிசூழ்
தேர்த்திருவுற் சவயாமந் திக்காளர் திகழநின்று
தூர்க்குமல ரெனவிண்மீன் சுற்றாழ்ந்து சுடரிரதம்
பார்த்தடிதாழ் குவர்செல்வர் தாமாவார் பரனுலகே.