முருகன் App
மாவைச் சித்திரகவித் திருவிரட்டை மணிமாலை
தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை
எழுத்து வருத்தனம்10 / 14
மாவைச் சித்திரகவித் திருவிரட்டை மணிமாலை · தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை

எழுத்து வருத்தனம்

13வெண்பா✓
மாவை நகர்வேண்முன் வஞ்சவினைச் சூர்படைக
ளேவு தொழிலுமுட லீர்கூற்றின் — மேவுமொன்று
மீருமவன் பாவத்துக் கெய்தி யதுமிரணம்
வாரணநி வாரணமாய் வை.
14கலித்துறை✓
(கலிவிருத்தமுமாம்)
வையம்புகழ் நகுலாசல மாவைக்குக னிருதாண்
மெய்யன்பொடு சுனைசங்கம வேலைக்கடன் முழுகி
வெய்யன்விது குளிரோடெழ வேணீள்கழல் பணிவார்
செய்யும்வினை தவமாமவர் சேர்வார்சிவ பதியே.