முருகன் App
மாவைச் சித்திரகவித் திருவிரட்டை மணிமாலை
தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை
கூடசதுர்த்தம்2 / 14
மாவைச் சித்திரகவித் திருவிரட்டை மணிமாலை · தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை

கூடசதுர்த்தம்

1தேர்வெண்பா✓
மாவார்பொன் சங்கமும்பூண் மாலம் புயனொலிசீ
ரோவா நபத்தினர்மற் றும்பலரு—மேல்வைதெரி
மாவைதினஞ் செல்லுமன்பர் வாழ்வுறப்பொற் பூவைகு
மாவைப் பதிபநம்முன் வா.
2கலித்துறை✓
(அறுசீரடி ஆசிரிய விருத்தமுமாம்)
வானங் கொண்டார்க் கிடர்செய்த
வந்துர் தன்னை மாய்த்தவர
ஞானங் கொள்பூங் கரச்சத்தி
நம்பிக் கென்று நற்றளியா
மானந் தச்சின் மயமாவை
யன்பிற் செல்வ தன்றியய
லேனஞ் செய்மா னுடர்செல்வ
தென்னோ வுள்ளத் தெண்வணமே.