முருகன் App
மாவைச் சித்திரகவித் திருவிரட்டை மணிமாலை
தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை
திரிபாகி8 / 14
மாவைச் சித்திரகவித் திருவிரட்டை மணிமாலை · தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை

திரிபாகி

9வெண்பா✓
வைமூ வெழுத்தாலோர் செந்ததி லீறற்றா
லெய்து மிகுதிநடு வேகில்விலங் — கெய்து
முதலொழியின் மாவை யுருவிமுழங் கோத
வுததிவளர் சங்கென் றுரை.
10கலித்துறை✓
(அறுசீரடி ஆசிரிய விருத்தமுமாம்)
உரைமிகு ஞான நன்னீ ரொழுகிச்செ லுததி சங்க
வரைமிகு மாவை யெம்மான் மலருற்ற வடிவ நற்றாள்
கரைமிகு காத லுற்றோர் கணமற்று மறத்த லின்றி
யிரைமிகு வேத நற்பாட் டிசையன்பி னிதய மூழ்கே.