முருகன் App
மருதமலைச் சந்தப் பதிகம்
ஸ்ரீமத் கந்தசாமி சுவாமிகள்
அகமலரின் மீதுநித்த11 / 14
மருதமலைச் சந்தப் பதிகம் · ஸ்ரீமத் கந்தசாமி சுவாமிகள்

அகமலரின் மீதுநித்த

10✓
அகமலரின் மீதுநித்த முனதடிவி டாதுபற்று
மமலநிலை யேபொறுத்த பெரியோர்போ
லடியனையு மேன்மைபெற்ற குணமருவு மாறுவைத்து
னடிமலரி லாகுமுத்தி யுறுமாறே
புகவிடனு மேதமிக்க கொடியனென நாகம்வைத்த
புவியினர்க ளேசவைத்து நரகூடே
புரளவிடு காலுமொப்பி லுனையலது வேறொருத்தர்
புகலுளர்கொ லோவெனக்கு மொழிவாயே
ககனநதி யார்கடுக்கை யரவைமுடி மீதுவைத்த
கனல்விழிகொ ளீசர்பெற்ற குமரேசா
கரியநிற மால்படைத்த வரவுருவ மாறிடச்செய்
கணபதிகொ ளோகைமெத்து துணைவோனே
மகரமுல வாழியொத்த கொடியவினை யேனுமொப்பின்
மலரடிக ணாடவைத்த குருநாதா
மகிமைபல வாயிரத்தை யுடையதனை யேநிகர்த்த
மருதமலை மீதிலுற்ற பெருமாளே.