முருகன் App
மருதமலைச் சந்தப் பதிகம்
ஸ்ரீமத் கந்தசாமி சுவாமிகள்
தரணியிலொர் பான்மதிய7 / 14
மருதமலைச் சந்தப் பதிகம் · ஸ்ரீமத் கந்தசாமி சுவாமிகள்

தரணியிலொர் பான்மதிய

6✓
தரணியிலொர் பான்மதிய மளவும்வயி றாடுகொடு
தருதாயி னைத்தனது மனையாளை னத்தினமு
மருவியுள மோகைபெறு மளவினுநி லாமலிது
வழுவாமெ னப்புகல லிலனாகி யுற்றமிகு
தகைமருவு தாதையையு மடியும்வண மேகொலதி
சலசாக ரத்தைநிக ருறுபாத கத்தனுமுய் வுறுமாறே
சரதசிவ ஞானவநு பவமருவி னோர்களணை
தகுசீல முத்தியிடை புகுமாற ளித்தருள்செய்
பரசிவன்மு னானின்முகி லளவியக லாலினடி
பயின்மாத வப்பயன தெனவேய முற்கணிடை
தனையனென வேகுலவி யருமறையி னாதிபெறு
தனியோமொழிப் பொருளையுபதேசம் வைத்தகுரு பரனாநீ
பரவியல்கொ டாதையினு மகனறிவி னீடிடுதல்
படிமீதி னிற்குலவு முயிர்யாவி னுக்குமினி
தெனுநன்மறை வாய்மைபெற வெவர்களையுமேனிலையி
லிசைவாகி டச்செயறி குறியாயெ வர்க்குமிழி
படியுமலி தீயனெனை யமரர்களு மாவல்பெறு
பலவான சித்திசெய்து முடிவான முத்திபுக விடவேநீள்
பருவமதி மானுமுக மலருமிகு தேசுடைய
பகைவேர றுக்குமுயர் வடிவேலு மக்கமொடு
தவளமுழு நீறணியு மெழின்மிலிகெள பீனமொளிர்
தடிநீடு கைத்தலமு நகைவாயு மொப்பரிய
பதுமமலர் போலுமிரு கழலடியு மேவுமுயர்
பவளாச லத்தைநிகர் திருமேனியைக் கொடெதிர்வருவாயே
கரவணுவி லாதமன முடையனுவல் பாவின்வழி
கடுவாய்கொள் சர்ப்பவடி வுளபாய்சு ருட்டியவ
னதுபிறகு போகவுமு னிசைவுறுவி சாலமுள
வருணீர்மை யைக்கொன்சினை முகினேருடற்கடவுள்
கமலமலர் போலுமிரு விழியில்வரு மாதரிரு
கனகாம லத்தைநிகர் தனமார்பு றத்தழுவுமுருகோனே
கனியமுத நாணுமெழு சுரமகதி வீணைவதி
கரநார தப்பெரியன் முனைநாளீ யற்றுமொரு
மகமதனில் யாவர்களு முளம்வெருவி யோடுமவண
மறமோடு தித்துவரு தகர்மீதி லுற்றொர்நொடி
கழிவதன்மு னேமுபுவி களையுமவல மாயமரர்
களிவேலையுட் புகல்செய் தருள்சேவ கத்தலைமை யுடையோனே
மரணமுட னேசெனனம் வருவழியி தாகுமென
மனமாய்வ தற்றுவன மிருகாதி யொத்தழியு
முடலையொரு நானெனவுண் மலியுமபி மானமுட
ணுணவோடு டுக்கைபெறும் விதமேநி னைத்துலகின்
மறுமையிலு மேழ்நிரய மடையும்வண மேமுயலு
மதியீன முற்றவெனை யடியானெ னக்கொளுயர் குருநாதா
மதுரவின மேழுசுர மறைபுகல வேரிதரு
வனசாச னத்திலகு கலைமாத ருட்கைபெறு
மகிமைமலி சீரியர்த மிதயமிசை யேபெருகு
வளமார்க வித்தொகைக ளெனவேக லிப்பொடெழு
மதுரமலி வாரிநிறை சுனைவளநி லாவுமுயர்
மருதாச லத்திலவிர் தருமா லயத்தில்வளர் பெருமாளே.