முருகன் App
மருதமலைச் சந்தப் பதிகம்
ஸ்ரீமத் கந்தசாமி சுவாமிகள்
தெருத்தலையிற் றுகிற்சரியத்9 / 14
மருதமலைச் சந்தப் பதிகம் · ஸ்ரீமத் கந்தசாமி சுவாமிகள்

தெருத்தலையிற் றுகிற்சரியத்

8✓
தெருத்தலையிற் றுகிற்சரியத்
தனத்தைவெளிப் படுத்திமிகச்
சிரித்துவசப் படுத்திநயக் குயில்போலே
திருட்டுமொழிப் பசப்பொடரைக்
கணப்பிரிவைச் சகிப்பதறத்
திகைத்துரிமைக் குணத்தரையொத் தவர்பாலோர்
பொருட்டொகைபற் றறக்கவரப்
பறித்தவரைச் சினத்துடனப்
புறப்படெனத் துரத்துமவர்க் குருகாதே
புலத்தையொருப் படுத்தியுனற்
பதத்தையுளத் திருத்தியதிற்
புகப்பெறுசிற் சுகத்தையுறப் பெறுவேனோ
திருப்பொலிநற் சிவச்சமயத்
திறத்தர்விழிக் கெதிர்ப்படின்முத்
தினத்துணவற் றவத்துடல்வற் றிடுதீதார்
திகைப்புமனக் குருட்டமணர்க்
கழுத்தலைபுக் கிறக்கவருட்
செயத்துடனற் புதத்தமிழ்மிக் கறைவோனே
யருத்தகையிற் றுருத்தகையிற்
றெனத்தெளியப் படுத்தெனகத்
தவத்தையுறுத் தருட்டருசற் குருநாதா
வகுத்தெளிவுற் றுடற்பிணியற்
றிடச்செயுமப் புதிக்குநலத்
தருச்சுனவெற் பினிற்குமரப் பெருமாளே.