கருமைமுகி லேபிளந்து மிசைமலர்கு லாவுகின்ற
கவினிலவு சோலையென்ற குழன்மானார்
கலவியெனு மாயவஞ்ச விருண்மலிவி சாலமுந்து
கடலினிடை யேவிழுந்து முழுகாதே
பெருமிதமு லாவுமுன்ற னிருபதச ரோருகங்கள்
பிறிவதில தாகியொன்று நிலையேதாய்
பெரியர்பத தூளியென்றன் முடிமிசையி லேயணிந்து
பிறவிமய லோடவென்று களியேனோ
மருமலர்க ளேநிறைந்த பொழில்குயின ளாவுகின்ற
மலைமுடிக டோறிலங்கு மிருதாளா
மகிதலமெ லாமளந்த பதுமமலர் நேர்பதங்கொண்
மழையுறழ்மெய் மாயனன்பு மருகோனே
மருவுமட மாதர்தங்க ளுருவைமிக வேவிழைந்து
வருணனைசொ லாதுவந்த குருநாதா
மகிமைமிகு தேனுவந்து தினமுலவு சீர்மிகுந்த
மருதமலை மீதுநின்ற பெருமாளே.