முருகன் App
மருதமலைச் சந்தப் பதிகம்
ஸ்ரீமத் கந்தசாமி சுவாமிகள்
நரிநாயை யொப்பவனுதின13 / 14
மருதமலைச் சந்தப் பதிகம் · ஸ்ரீமத் கந்தசாமி சுவாமிகள்

நரிநாயை யொப்பவனுதின

12✓
நரிநாயை யொப்பவனுதின முயிராயி ரத்தைவதைசெய்த
நவையார்பி ணத்தைநுகர்தரு தொழிலேசேர்
நரர்போலு ருக்கொணிசிசரர் குறையான தற்றிவுலகினி
னமையார்நி கர்ப்பரெனவுன திருதாளே
விரிவான பத்திகொடுதினம் வழிபாடு யற்றுபெரியவர்
மெலிவோடி யற்றும்வகையினை யறியாதே
விவிதாகு லத்திலுலைவதை யறியாய்கொல் சித்தமிசையொரு
விளையாட லொத்தநினைவுகொ ளுளையேயோ
கிரிநேர்க றுத்தவுடம்பெறு கொடியோர்கள் யுத்தகளமிசை
கெடவீர சத்திகடவிய திடவீரா
கிளிநாதன் முற்சொல்கவிபகர் வழுவாத பத்தியடியவர்
கிளையோர்க ளுக்குமதிநல மிடுவோனே
மரிவான முத்திபெறும்வழி யிதுவேயெ னச்சொல்குறியொடென்
மனவால யத்திலுறைதரு குருநாதா
மழைமால்க வித்துநெடுகிய திருமானி கர்த்துநிலைபெறு
மருதாச லத்தின்மருவிய பெருமாளே.