மடவார்க ணத்தின்மத்தி தனிலேயு யர்ச்சிமிக்க
மலயாச லத்திலுற்ற சிறுகான்மேன்
வருதீமை யைக்கொடுட்ட மதவேள்செ லுத்துபுட்ப
மழைமார்பி னைத்துளைக்கு மதனாலே
விடமேறி மிக்கயர்ச்சி யுறுவோரெ னக்களைத்து
மெலிவேனெ னைக்கடைக்க ணிடைநாடா
விரையார்ம லர்ப்பதத்தை முடிமீதி னிற்கவித்து
விரிவான சிற்புகத்தை யருள்வாயே
கடமானை யொத்தமைக்க னுடையாண்ம னத்திலுற்ற
கனவூட லைத்தவிர்த்து நயமேதோய்
கவிவாண னைக்களிக்க வருளீசர் நெற்றிபெற்ற
கனலான கட்புலத்தில் வருவோனே
வடமோடி ணைத்தபற்பல் கிளைநீடு துற்குணத்தென்
மனமீது முற்றவொப்பில் குருநாதா
வருவார்களிச்சைமுற்று மறவேகொ டுக்கவொப்பின்
மருதாச லத்திலுற்ற பெருமாளே.