முருகன் App
மருதமலைச் சந்தப் பதிகம்
ஸ்ரீமத் கந்தசாமி சுவாமிகள்
ககனமதெட்டித் தொடுஞ்சிரம்பெறு12 / 14
மருதமலைச் சந்தப் பதிகம் · ஸ்ரீமத் கந்தசாமி சுவாமிகள்

ககனமதெட்டித் தொடுஞ்சிரம்பெறு

11✓
ககனமதெட்டித் தொடுஞ்சிரம்பெறு
பொழில்கள்வளப்பத் தொடும்பிறங்கிய
கவினுறுவெற்புத் தொறும்படர்ந்துயர் சுவையேதோய்
கடலமுதத்தைப் புரைந்தசெந்தமி
ழதனிலுவப்பைத் தருஞ்சுகம்பெறு
கவிமழையொப்பப் பொழிந்திடும்படி விழைவேனா
னகல்புவியிற்சொப் பனம்புரைந்திடு
நிலையிவ்வளத்திச் சைகொண்டுமூன்றிடு
மசடர்பழிக்கக் குலைந்துசந்தத மெலியாதே
யலைகடலைக்கைக் கடங்கிடுஞ்சிறு
மிளகினையொப்பப் புரிந்தருந்திடு
மவனினையப்பெற் றுளங்குளிரிந்திட வருள்வாயே
மகபதிசொர்க்கத் தமைந்திடுந்துணர்
புவியரசற்குக் கொணர்ந்துதந்திடு
மகிமைகொள்பச்சைச் சுகந்துலங்கிய புயவேளே
வழுதியுடற்கட் பொருந்திவஞ்சகர்
மயிலிறகைச்சுட் டிடுஞ்சுரம்பினொர்
வடிவினரைக்குட் பிறங்கியன்றறல் புரிவோனே
மகவுயர்வொப்பற் றிடும்பெருங்கதி
தருமெனநத்திச் சுழன்றிடும்புவி
மயலையறுத்திட் டுளம்பொருந்திய குருநாதா
வருமினனெய்ப்புத் தணிந்திடும்படி
கவரியிரட்டற் புதம்பெறும்பொழின்
மருதவரைக்கட் சிறந்தொர்தண்டணிபெருமாளே.