முருகன் App
மருதமலைச் சந்தப் பதிகம்
ஸ்ரீமத் கந்தசாமி சுவாமிகள்
அலைவேலை சுற்றுபார்மிசை6 / 14
மருதமலைச் சந்தப் பதிகம் · ஸ்ரீமத் கந்தசாமி சுவாமிகள்

அலைவேலை சுற்றுபார்மிசை

5✓
அலைவேலை சுற்றுபார்மிசை யுளதான பொய்க்கனாநிக
ரழிவாழ்வை நித்தமாமெனு நினைவோரா
யசுரேசர் வெட்குமாறுள பழிபாவ முற்றுமேபுரி
யறியாய முற்றதீயர்செய் வினையாலே
தலையான மிக்கமாதவ நெறிசேருநற்குணாலர்க
டளர்வாகி நித்தம்வாடவும் விடலாமோ
தனிவேல்கரத்திலேகொடு முணரார்க ளொத்துநீயுறல்
சரியோவி ரக்கமோர்சிறி திலையேயோ
மலைதோறு நித்தமாடல்செய் பதநாடு பத்திமாதவர்
மனமேவு மிச்சையாவையு மெளிதீவாய்
மருவார்பு ரத்தைநீறெழ நகையாடு நித்தனாரது
வலமார்செ விக்கணோமுரை பகர்வோனே
மலையேறி கர்த்தவாணவ விருளோடி டற்கெனாதுகன்
மனவால யத்துளேவதி குருநாதா
மதனாக மத்திலேதின முழல்வாரு மெச்சுசீர்மலி
மருதாச லத்தின்மேவிய பெருமாளே.