முருகன் App
மருதமலைச் சந்தப் பதிகம்
ஸ்ரீமத் கந்தசாமி சுவாமிகள்
நினைவார்த நெஞ்சகத்தி3 / 14
மருதமலைச் சந்தப் பதிகம் · ஸ்ரீமத் கந்தசாமி சுவாமிகள்

நினைவார்த நெஞ்சகத்தி

2✓
நினைவார்த நெஞ்சகத்தி லுவமான மொன்றுமற்ற
நிறைபூர ணங்கொளுற்ற சுகமேசேர்
நிமலாக ரம்பொறுத்த வுனைநாடு கின்றசுத்த
நெறிகாண வுஞ்செய்திட்டும் விலகாதே
முனைவேல்க ரம்பிடித்த துரையேப ழன்றெரிக்கு
முதுவேனி லொன்றுலுற்ற புழுவேபோன்
முழுமாயை யின்றிறத்தி லுழல்வாதை கண்டிருத்தன்
முறையோவு னன்புளச்ச மதிதானோ
முனைவோர்க ணந்துதிக்கு மரசான கும்பனொத்த
முதியோரு ணர்ந்துவக்கு மிருதாளா
முருகாவெ னுஞ்சொல்சற்று மறவாம லன்பினித்த
மொழிவாள்க ரந்தழைக்க வருள்வோனே
மனைமாத ரென்றதுக்க வலையூடு ளம்பதித்து
மடியாந லங்கொளச்செய் குருநாதா
வழுவாமெ யன்புபெற்ற பெரியோரி னந்துதிக்கு
மருதாச லம்பொறுத்த பெருமாளே.