குணநீடு மின்றுலங்கு பவளாச லம்புரைந்த
குருமேனி கொண்டுவந்து தயவோடே
குறையாவை யுந்தவிர்ந்த பரிபூர ணம்புகுந்து
குடியான லம்புகன்று மறியாதே
கணமாயி னும்பொருந்தி நிலையாத புன்புலன்கள்
கரணாதியின்க ணொன்றி யிழிவேதோய்
கடைவாழ்வை நம்பிநொந்து தொலைவேனை யன்பர்துன்று
கதிசேர்கு ணந்துலங்க வருள்வாய்
பணமாயி ரங்கொள்கின்ற வணைமீத னந்தல்கொண்ட
பகவானு மெம்பொருந்து மருகோனே
பரன்மீத மைந்தகுன்றர் தவமாதை யன்புகொண்டு
பணிசீர்வி ளம்பி னன்கு மகிழ்வோனே
மணவாரி சம்புரைந்த வடியோடெ னன்பகன்ற
மனமீதி லும்பிறங்கு குருநாதா
வளநீடும் விண்புரங்கொண் மடவார்ந டஞ்சிறந்த
மருதாச லம்புரந்த பெருமாளே.