முருகன் App
மருதமலைச் சந்தப் பதிகம்
ஸ்ரீமத் கந்தசாமி சுவாமிகள்
விரையார்சி வத்தகஞ்ச2 / 14
மருதமலைச் சந்தப் பதிகம் · ஸ்ரீமத் கந்தசாமி சுவாமிகள்

விரையார்சி வத்தகஞ்ச

1✓
விரையார்சி வத்தகஞ்ச மலர்மீதி ருக்கை கொண்ட
வியனான்மு கத்தனாங்கை வரைமாணா
விதியேப லத்ததென்று பெருவாதி யற்றுகின்ற
விபரீத ருட்கழன்று மடியாதே
கரைதீர்ம் றைக்குலங்க ளறியாதொ ளித்திலங்கு
கவினாரு னற்பதங்க ளகலாதே
கருதோகை பெற்றதொண்டர் வதிசேக ரத்தடைந்து
களிகூர்ந லத்தையென்று தருவாயோ
திரைசேரு டற்பொருந்து முதியோனெ னத்தளர்ந்த
திருமேனி யைக்கொடொன்றும் வழியேதோய்
சிலைவேடர் பெற்றமங்கை தருதேனி டைக்கலந்த
திணைமாவி லிச்செமிஞ்சி நுகர்வோனே
மரைநேரு ணர்ச்சிகொண்டு திரிவேனெ னைப்பொருந்து
மயலோடி டச்சிவந்த குருவாவாய்
மழைநேர்ம யிற்குலங்க டினமாடி டச்சிறந்த
மருதாச லத்தமர்ந்த பெருமாளே.