முருகன் App
காவை முருகன் பிள்ளைத்தமிழ்
கலைவாணன்
கவித்துவம் வாழ்க!15 / 15
காவை முருகன் பிள்ளைத்தமிழ் · கலைவாணன்

கவித்துவம் வாழ்க!

71✓
இழந்ததனை மீண்டும்அடைந்து
இன்பமுறத்,தன் அருளாம்—
என்கைக்கு எட்டும்—
பழம்கனிய, வெண்ணாவல்
பைம்பழனத்து அமர்ந்தவள்கை
பரிவோடு ஏந்தும்
குழந்தையொரு ஆகியநம்
குமரனுக்குப், பாமாலை
கோலம் செய்து.
வழங்கிடவந்து என்உளத்தே
வளர்கின்ற கவித்துவத்தை
வாழ்த்து வேனே!
72வாழ்த்து✓
வேதனைச் சகதி நாற்ற
வீச்சம்ஓய்ந்து, அமைதி வாசம்
விரிந்தெழ என்னுட் பூத்து
விண்ணெழில் பரப்ப வந்த
பாதபங் கயங்கள் வாழ்க!
பாசவேர் அறுக்க நீண்ட
பன்னிரு தடந்தோள் வாழ்க!
பகுத்துணர்ந் அறியும் ஞான
போதமெய் யுருவாம் வேலும்
புள்அமை கொடியும் வாழ்க!
போற்றுமன் மனக்கண் முன்னே
புன்னகை வதனம் காட்டும்
நாதனாம் முருகன் வாழ்க!
நானும்என் தமரும் வாழ்க!
நற்றமிழ் மணக்கும் இந்த
நானிலம் வாழ்க! வாழ்க!