பொருந்து மெளியே மவவின்மைப்
பொதியோ வியமெய் யுறைபோர்க்க
பொல்லா விருசார்ப் பற்றின்மைப்
பொன்னஞ் செருப்பிற் கழல்சேர்க்க
முருந்து மூரன் முகமணிக்கு
முதல்வா! கதிரை யெம்பெரும!
முந்து குறங்கில் வட்டுடைஞாண்
முழந்தா டொடங்கி நுசுப்புவரை
விருந்து பொடிப்பச் சுருக்கிப்பல்
வேறு கலையின் செல்வமெனும்
விளிம்பிற் பச்சை மணிநிரைத்த
வெருள்பாம் பன்ன கச்சினையார்த்
தெருந்து முமிழ்காழ் மறைத்தடற்று
ளீர்வாண் ஞானஞ் செறித்தருளே
யெண்செந் நிலைக்கைப் பிடிவயிர
வீர்வாண் ஞானஞ் செறித்தருளே.