கதிர்காமப் பிள்ளைத்தமிழ்
சிவங்கை கருணாலய பாண்டியப் புலவர்
செங்கீரைப்பருவம்3 / 15
கதிர்காமப் பிள்ளைத்தமிழ் · சிவங்கை கருணாலய பாண்டியப் புலவர்
செங்கீரைப்பருவம்
4அறுசீர்க்கழி நெடிலடி மிரட்டை யாசிரியவிருத்தம்✓
மலையிறையன் வனைபாவை யிணைகணைக் கான்முட்டு
வார்ந்திருந் திடை நுடங்க
வள்யாமை முதுகுபுரை புறவடிய சுவடுகொள
வாய்ப்பக்கி டப்பியருகே
மருவுதன் றாய்மணிக் கலனினிள வெந்நீரை
வார்ப்பவார்ப் பப்பைப்பய
மழமகவு யிர்ப்பெறிய நுதன்மீய கங்கைவிரல்
வைத்துவுழி நீர்தகைந்து
✓
விலைவிஞ்சு பசுமஞ்சள் விழுதினைத் தைவந்து
மீண்மீள மண்ணிமொக்குள்
வீழ்சுழிக் கொப்புழி ஞாதியிமை மிகவூதி
மெய்ச்செவியி னறலகற்றி
விழிமுனையை யுகிர்நுனியின் விரியப்பி ளந்துமுலை
மேலாடு துகிலாடையான்
மென்மெலென வுடலொற்றி யீரஞ்சு வற்றிநுதல்
வெண்பொடிக் காப்பிட்டுவிம்
✓
முலையிறுகு வார்நெகிழ வாய்மடுத் தமுதாட்டி
முகமிணைய முத்தமிட்டு
முன்கையிற் பாராட்டி வாழ்ந்தமைந் துச்சியினை
மோந்துபள் ளிப்படுப்ப
முதுகுகுனி கடுவனொடு மந்திபார்ப் பைக்குகொஞ்சு
முதுகதிரை யந்தாள்வரை
முட்குடமு ழாப்பலவி னிழலிலஞ் சேய்துகண்
முகிழ்விரல் வாய்புகுப்பச்
✓
சிலைமுகிலி னவ்விவுச் சுட்டுவிர லுய்ப்பவரு
சிறுதூசி வீசிவெகுளுஞ்
செவ்விவயி றுங்குழிய வாய்கூம்ப வழுமெழில்
சிவனோடு நுகரவளர்நிற்
சிவணுமக வைப்பொறையு யிர்த்துயத் தொழுவரிவர்
செங்கீரை யாடியருளே
திருவுயர்ப டைத்தலைவ! கவுணியர்கு டிப்புலவ!
செங்கீரை யாடியருளே.
5வேறு✓
தாழைப் பழமுதி ரச்சிதர் வாழைத்
தாறுவ ழுக்கு நெறி
தள்ளவண் முத்துச் துலுளை வால்வளை
தட்டுக் கான்றுகலுந்
தணிமாங் கனிதலை யிடறிநி மிர்ப்பச்
சாறிதழ் வாய்வடியுந்
தண்பொழி லோவப் பைம்மணி மனைதுவர்
சான்மணி சுடரெறியும்
✓
மாழைத் தெருநேர் யாற்றுக் கதிர்கா
மகிழ வா! மழவா!
வளவிய வயல்சூழ் வங்கக் கலிங்க
மன்னன் றவமகளார்
மாண்புநி றுப்பச் சிங்கள வேந்தனை
வன்சிறை செய்ம்மறவா
வடமன் பன்னீர் யாண்டுந் துயிலான்
வழிபட வருகுறவா!
✓
பிழைப் படுபிணி தீர்க்கும ருந்தே!
பெருமித வின்சுவையே!
பேணிய வடியவர் ஞானப் பேரழல்
பெற்றுரு கும்பொன்னே!
பிணிமுக வேழவு லாப்போ தருயாழ்
பிறவா வின்னிசையே!
பெரியார் கதிர்மலை வருவாருணநெய்
பெய்வெள் ளவிழ்முறுவற்
✓
சீழைப் புட்புன் பிறவிப் பகைமைச்
சிறுநகை முகிழ்முகிழச்
செங்கைநி லத்தின முத்திமு ழந்தாள்
செவ்வன்ம டித்தொன்று
சீர்ப்பநி மிர்த்துத் திருமுக மசையச்
செங்கோ செங்கீரை
திருவின் றிருமகள் வள்ளிம ணாளா!'
செங்கோ செங்கீரை.
6அறுசீர்க்கழி நெடிலடி யிரட்டை யாசிரியவிருத்தம்✓
எளியாரை யுணர்தற்கு மவ்வவர்க் குதவற்கு
மெட்டுப்பத் துச்சாலுமோ
வென்றுபனி ரண்டுநீள் கைவிழிப டைத்துடைமை
யெத்துணைக் கடவுளரினு
✓
மளியானு மொப்புயர்வி லாயாத லுணரவரு
மைதுசான் றென்பவாலோ
வல்லாத பிறர்போல்வி னைத்தொடர்பி லாய்நினக்
கழிவில்கவி னிளமையொக்கும்
✓
விளியாத விருண்மைநிற் றொடுதல்வற் றன்றாதல்
வேலேகு ரித்துரைக்கும்
வேறுமீ ரியல்பிரும டந்தைமார் கூங்கோழி
மீளிமயின் மறையருளிது
✓
தெளியாத வேழையர்வி லங்கல்ல ரோவையை!
செங்கீரை யாடியருளே
தேனருவி யுவகைவிழி நீருறு கதிர்மலைச்
செங்கீரை யாடியருளே. 6