ஈரெழுத் தீரிருசொன் முப்பொருளி னாற்பாவி
யைந்துமுச் செய்யுளணிக
ளிசைகூத் திவற்றையவ் வக்கலைஞர் கழகத்தெ
டுத்தகட் டுரைமுழக்க
விவ்வுனை மண்ணொடெரி நரிதின்னு முன்னீரி
ரண்டாவ துறுதி நிலைக
ளெய்துபாக் குயிர்வளியொ ருக்கிக்க திர்க்காம
மேகிவாய் வாளாவதிந்
தோரெழுத் தறிவுவெளி யுயர்வுள்ளி யும்மினென
வுறுவர்வாய்ப் பறைமுழக்க
வொல்லெனவி ரைக்குமரு விச்சாரல் வித்திவிளை
யுலர்தினையின் மடையெதிர்படைத்
துறுபுலித் துப்பினிமிர் கானவர்து ணங்கையொடு
தொண்டொண்ட கம்முழக்க
வூர்ப்பொதியி லிற்குனிப் போன்முழுத் தோன்மடியு
டுக்கைவன் பறைமுழக்கக்
கூரெழுத் தாணியென வன்தூரன் மார்பேடு
குறிகொளப் புகழெழுதுவேல்
கொண்டதிண் டிரல்பரவு மிமையோர்க ளடுவென்றி
கூறுவிட் பறைமுழக்கக்
குன்றுகுடை யாவெடுத் தானிரைபு ரந்தான்கு
றிப்பிற்செ லத்துரத்துங்
கோலக்கு ளிற்றாழ வேழ்துளையின் விரன்றொட்டு
கூடவேய்ங் குழன்முழக்கச்
சீரெழுத் துன்னியென விணைதோ ளுயர்த்தித்தி
ணுக்கெனச் சாய்த்திடக்கை
சேப்புறவி டுக்கிக்க ளித்துச்சி மிட்டிவரி
சிதர்துடிக் கைக்குணில்கொடு
திருமாமி நாணவும் மருதாயர் காணவுஞ்
சிறுபறைமு ழக்கியாடாய்
தெந்தோந்து மக்கினரு டந்தோமெ னப்படச்
சிறுபறைமு ழக்கியாடாய்.