குன்றந் தோறும் பன்றிபுனங்
கொன்று நொக்கக் குறவர் செலல்
குறித்துப்பகலிற் றினைகோழி
கொறிப்ப வுணக்கும் பாறையிசைச்
சென்றங் கெறிந்த விளநிலவிற்
செங்கை பிணைந்து குரவைதழீஇச்
சிரித்துக் குலுங்கு மகளிரொடு
திரியுங் கதிர்கா மக்கள்வா!
வின்றஞ் சியும்யா மெடுப்பேமென்
றிருந்தா யேலஃ தெமக்கொல்லா
தேங்கி யழக்கை காலமுக்கி
யிஞ்சிச் சாறூட் டேந்தினவு
தின்றந் தோபாற் குடங்கொட்டிச்
சிந்து முலைகாண் வருகவே
சிங்கக் குருளை தவழ்வதுபோற்
செல்வா! வருக வருகவே.