முருகன் App
கதிர்காமப் பிள்ளைத்தமிழ்
சிவங்கை கருணாலய பாண்டியப் புலவர்
உணவூட்டல்5 / 15
கதிர்காமப் பிள்ளைத்தமிழ் · சிவங்கை கருணாலய பாண்டியப் புலவர்

உணவூட்டல்

10வேறு✓
ஏறூரு மவனினிது கோதாட்ட வருமெங்க
ளேறே! முழைக்குள்ளாளி
யினியநின் னடைகண்டு வெள்கியுளை யக்கதிரை
யேர்வடவை யாற்றின்றுறை
தோறும்விளை யாட்டயர்ந் தாங்காங்கு நீராடு
தொண்டர்க்க டைக்கணீக்குஞ்
சோனையருண் மாரியே! தித்தித்த தேம்பாகு
தோய்ந்தகட் டிக்கரும்பே!
கீறுமுலை யமுதாறல் பருகுங்கோ மானின்று
கிளர்கொங்கை யொப்பாகுபொற்
கிண்ணத்து நறுமணஞ் சிவமணம் போன்மன்பு
கெழுநெய்ய னாய்ச்சமைத்த
சோறமுது மாயர்தயிர் தொட்டுண்ட கள்வன்மகிழ்
சூழ்மருக! வுண்டருள்கவே
சொற்றொழும் பாளரது ளங்கவர்ந் துண்டல்போற்
சேற்றமுது முண்டருள்கவே. 10
வேறு✓
ஆழி கடைந்து குடம்நிறைத்த
வமுது மிதற்கு நிகரல்ல
வந்தண் வேள்வி யவிசொரியு
மதுவு மிதற்கு நிகரல்ல
வாழி திருந்து செந்தமிழின்
வழக்கு மிதற்கு நிகரல்ல
வள்ளி யூடிக் குழைந்துசொலும்
வழக்கே யிதற்கு நிகராகும்
11✓
காழி ஞானப் பால்குழைத்த
கலையு மிதற்கு நிகராகும்
கதிர காமத் தன்பர்பலர்
கனிவுங் குழைத்த திதுவாகும்
கோழி கூவுங் கொடியசைக்குங்
கோவே சிறிதே யுண்டருளே
குறித்த வருண்மெய் கொழுத்துயரக்
கோவே சிறிதே யுண்டருளே.
12வேறு✓
ஆடுமி ருட்டிர ளயரப் பெரியோ
னாடியி ளைப்பதுபோ
லாரிய முனிவர ருந்தக், கண்ணன
ருந்திய முறையேபோற்
காடுக றங்கக் கதிர்மலை கூவக்
கன்னியர் கூவுதல்போற்
கதிர்வடி வேன்முருகா! வரு ளாகிய
கழிபசி மீதூர்வாய்
கூடுவி னைத்துப் பாருயி ராரக்
குற்றடி யார்நினது
கொண்டா டுங்குண னாரப் பயிருங்
கொண்டன் மழையார
வாடுத மிழ்ப்புல வோர்வயி றார
வாய்ச்சோ றார்குகவே
வள்ளித ருந்தேந் தினைமா வெனவே
வாய்ச்சோ றார்குகவே.