நச்சர வும்புலியும் பச்சிலை நச்சியிட
நவையறு மாடலதின் சுவைநுகர் வித்துணர்வு
நல்குத லானும்வெளி புல்குத லானும்விழி
நாடுந் தண்டில்லங் காடுங் காமமதோ?
விச்சிய தின்றிவிளை விப்பவ னுந்நீயோ?
வென்றொளிர் பூமிசையே கன்றுவ திருவடியோ?
விட்புல வாணர்க்கு முட்புல னாகாத
வெளியோ? நின்னுடல மளியோ? நின்னியல்பே
யிச்செய னீதாமே யாயின வர்க்கன்றி
யாதுந் தெரியாதென் றோதும் மறைமுடிபே
யெம்மிரு கண்மணியே மன்னுயிர் தம்முயிரே
யிளஞா யிற்றினொளி யெனமா மயிலிவர்வோய்
துச்சிலி ருக்குமுயிர்ப் புக்கில ளிப்பலெனத்
தொட்டவ ளைக்கையாற் கொட்டுக சப்பாணி
சொற்பொரு ளல்லாத மெய்ப்பொருண் முனிவர்க்குச்
சுட்டிய பொற்கையாற் கொட்டுக சப்பாணி.