முருகன் App
கதிர்காமப் பிள்ளைத்தமிழ்
சிவங்கை கருணாலய பாண்டியப் புலவர்
நிலாவழைத்தல்10 / 15
கதிர்காமப் பிள்ளைத்தமிழ் · சிவங்கை கருணாலய பாண்டியப் புலவர்

நிலாவழைத்தல்

25✓
வெங்கட் டேறற் றேட்கடுப்பின்
மீக்கூர் களியா னகையரும்ப
மீன்கண் மறுகச் செவ்வழியாழ்
வெறிப்பப் பணைத்துத் தருக்கிமத
வேளைச் சினந்து பணிகொள்ள
விரைசேர் குரும்பை வெளிவிம்ம
விரும்புங் களம ரேப்பகட்டை
வெடிசே லுழக்கி யுகைத்தோட்ட
வங்கட் கரும்பிற் களைகளையோ
டாண்மை யுளமும் பறிப்பார்கட்
கமஞ்சூன் கமுகஞ் செறிவேலிக்
கப்பா லிதணிற் கொடிச்சியர்க
ளருமா ணிக்கங் கிழங்குதினை
யளிகண் மொய்க்குங் கொம்பிற்றே
னார்வம் வழங்கி நறைக்குவளை
யார வாங்கிக் குழற்கணிந்து
தங்கட் குரிய பரண்காவல்
சாருஞ் சாரற் கதிரமலை
தனித்துக் காட்டு ணிலைநின்ற
தவத்தின் விளைவித் தமிழ்ப்பிள்ளை
தனது குவியா நீலமொடு
தனியே யலர்ந்த தாமரைகாண்
டடுக்கு மீக்கோள் வாய்வைத்துச்
சாய்ந்து மலர்ந்து சிரிக்கின்றான்
றிங்கட் செல்வா நினைக்கண்டு
திருக்கை யோச்சி விளிக்கின்றான்
றேடக் கிடையா னின்னும்மைச்
சிறப்பாற் சிறிது நின்னோடு
திருவிளை யாடல் செயப்போலுந்
திருவுள் ளக்கிடை வாநிலவே!
சிறுவன் றமப்பன் செய்ந்நன்றி
சிதையா தாட வாநிலவே!
26வேறு✓
கீழ்பாலின் வேந்துகுடை பற்றமேல் பாற்கடவுள்
கிளர்கவரி வீசவடபாற்
கிழவன்மடி சுருள்கொடுப் பத்தென்ன வன்போற்றி
செய்யநா ரதமுனிவர்பேர்
யாழ்சால வின்சுவைப் பண்செய்ய வரைதொறும்
யாடுபாய் கதிர வெற்பின்
யாளியணை மீதுநா ளோலக்க மாயிருந்தி
யாண்டுமுள விருதிணை யுயிர்
தாழ்வோடு தன்னாணை நெறிநிற்ப வுய்க்குமித்
தலைவனைச் சிறியனென்ற
தறுகணா டற்குரு மலரோனு மாழுமிழி
தகவினைநி னைக்கநிலவே!
வாழ்வான கடலலவ னுறழவிண் டவழலவ!
வந்துவிளை யாடுவாயே
வடிவேல னடைகைபிழி சாரயில லாமினிது
வந்துவிளை யாடுவாயே.
27வேறு✓
நாம்புகழ் முருகுபூங் கடம்பினமர்
நம்பி யழகு குதலைகட்கு
நயமில் புல்லொடு கல்லுருகும்
நரைக்கூன் றிங்கா ணியுருகாய்
நளிகாற் கரந்து நகைக்கின்றாய்
நாணா தெங்கள் பறம்பினிமேல்
நணுகினி துக்கா ணெற்றுவனாம்
நம்பன் சடைமுடி புகல்புகலின்
வாம்பொரு சிம்புட் கழறுகைப்ப
மதியே பொன்றக் கெடாதுய்ந்தாய்
மதியா னாண்டு மிதிப்பனிவன்
மதலை துடுக்கன் குறும்பாளன்
வணக்கும் பொருப்பு வில்லியுரை
வாங்கா னவற்கு மாசிரியன்
வாவி நீந்து மன்னம்போல்
வனப்பிற் கேய்ந்த குணனில்லாய்
காம்பும யிற்பரி மேலழகன்
கானங் கோழி முட்டைகளிற்
கழனித் தாரா வடைகிடக்குங்
கதிர்கா மப்பிள்ளைப்பெருமாள்
கலைமுக மதிபோ லகவிருளைக்
கழிக்கு மாற்ற லின்மையினாற்
கவற்சி யுட்கிக் குறைகின்றாய்
கழறும் போது கறுக்கின்றாய்
தேம்பிய வாழிப் புள்ளன்னார்
தேக்க நிலவு கொப்புளித்துத்
திறம்பா மங்கு லியங்குமிது
செருக்கு வேண்டா கருநஞ்சு
சேர முழுதும் பரவாமுன்
றிரும்பி யீண்டு வாநிலவே!
திருக்கை தீண்டப் படினொழியத்
திருந்தா யாட வாநிலவே.