முருகன் App
கதிர்காமப் பிள்ளைத்தமிழ்
சிவங்கை கருணாலய பாண்டியப் புலவர்
தாலப்பருவம்6 / 15
கதிர்காமப் பிள்ளைத்தமிழ் · சிவங்கை கருணாலய பாண்டியப் புலவர்

தாலப்பருவம்

13வேறு✓
நீரின் முளைத்த மாவீழ
நெருப்பின் முளைத்தின் னருடழைத்து
நினைவு பூத்துப் புலங்காய்த்து
நிறையப் பழுத்த கற்பகமே
நேருன் னடித்த ணிழலன்றி
நிற்பார் வெப்பந் தணிவாரோ!
நெடுநாள் வானோர் வாழ்வாரோ?
நீதா னாரோ? யாமாரோ?
வோரின் னெனச்சொல் வடித்துணர்வா
ருலவாப் பெருமை யாராரோ?
வுணர்வார் கூற்றங் கொள்ளுங்கா
லுற்றார் பெற்றா ராராரோ?
காரின் மலருங் கதிர்காமக்
கடம்பா! தாலோ தாலேலோ
கலைமான் பாடக் கண்வளராய்
கனியே! தாலோ தாலேலோ.
14வேறு✓
சேரன் சோழன் பாண்டியன்முச்
சீர்தைத் தமிழக முடிமன்னர்
செங்கோற் கொற்றஞ் செலவரிசை
சிறந்த கட்டிலி லமர்ந்தஞான்
றீரந் தோய்ந்த நெஞ்சம்போ
லிழைத்த கோட்டமெ ழுந்தருள்பே
ரின்பம ணித்திரு வருண்மேனி
யிற்றைக் கெவனோ மறையமறச்
சூரன் கோட்டை சிதையவெழுந்
தோன்றாப் பிழம்பு வெளிநிற்பத்
தொல்குடி மரபின் றலையளிபோற்
றோன்ற வொழுகிம ணிக்கங்கை
வாரங் கொண்டும ணிப்பூத்தாய்
வாழ்த்துங் கழலோய் தாலேலோ
வந்தெந் தொழும்பு கொள்காம
மணியே தாலோ தாலேலோ.
15வேறு✓
உணர்நின் றந்தைகொ டாதொழிந்த
வொருமாம் பழத்திற் கழுதாயோ?
வுயிர்கள் பிறந்து படும்பாட்டிற்
குருகிப் பொருமி யழுதாயோ?
புணருங் காழிப் பெருந்தகைதான்
புடைத்தான் கொல்லோ வேனழுதாய்?
புலவர் மகளிர் கவுட்கிள்ளப்
பொறாதோ? பின்னை யேனழுதாய்?
வணர்மென் குழலி முலைச்சாய்ந்து
மார்பம் பாய லாச்செங்கண்
வளர்வாய் தவத்த ரெய்த்தலச
வாரா யன்பர்கசிந்துமலர்
கொணருங் கதிர மலைவந்த
குழகா! தாலோ தாலேலோ
கொடும்போ ரசைவு தவிர்ந்துயிலைக்
கொள்ளாய் தாலோ தாலேலோ.