அன்றி லங்குகுரு குன்றி னூடுபுக
வம்பு விட்டதக வொன்று நெஞ்சினை
யன்று வீடுமற் பொன்று விப்பவம்
பாளி னங்கையின லங்க றந்தனை
நன்றி நல்லியக் கோடன் வெல்லவே
னட்டபாடிவே லூரு மாய்த்துசெந்
நாவ டங்குதலி லாத பூவனுமி
ஞால மேன்மகனு மாதல் கேட்டுமா
லின்றி யாநினக் கஞ்ச லின்றியுமி
றைஞ்ச லின்றியுமி ருப்பெ மோவடி
யேழை யேமொடுநி னக்கு நேர்ந்தபகை
யென்ன வோவிதியை யன்றி நின்னிவட்
சென்றி யென்றவளை நோவெமோ கதிரை
சேர்ந்த சேந்த! சிதை யற்க சிற்றிலே
சீற டிக்கொடெந் தலையெ ழுத்துறுசி
தைக் வேந்த! சிதை யற்க சிற்றிலே.