முருகன் App
கதிர்காமப் பிள்ளைத்தமிழ்
சிவங்கை கருணாலய பாண்டியப் புலவர்
காப்புப்பருவம்2 / 15
கதிர்காமப் பிள்ளைத்தமிழ் · சிவங்கை கருணாலய பாண்டியப் புலவர்

காப்புப்பருவம்

1திருமால் முதலிய முக்கடவுளர் காப்பு✓
எண்சீர்க்கழி நெடிலடி யீரிரட்டை யாசிரியவிருத்தம்
மணிதிருவ மறுவியன் மார்பமதி னவிர்வரா
மணமுடைய கோதையும் வைப்புண லொளிர்தலின்
மடமையணி கலமணி நிலமகள்பொ றாமையான்
வருமொர்துனி புலவியின் மடிதிரை யுடையிடை
வரையவிழு கிடையிணன் மழமழென வொழுகுண்
மழைவெருவி யொருதுடை மடிமிசை மலைமுலை
மருவுபொழு தடுபடை வறுவியகை நல்கினான்
மறையிளவ லடிதொடு மாணவ வடிகளை
✓
யணியிதழி வளர்பொலங் காவின்மறை பின்னையை
யறிதலினை யொழிதர வாவென வெருவர
வரவுறினு மொருமுறை யானுமனை யறமக
ளஃதறிய வரின்வரு மோவென வயிறவுற
வறிதுயில்கொ ளறிஞர்தந் நுதனடுவ ணிணை விழி
யடைசியென வடைசியெம் மாளுடை யொருகுயி
லவவுமொரு பாலினிற் கட்கடைசெலக்கருத்
தமர்களவு கற்புநூ லாசிரிய ரியவுளைத்
✓
துணியவலர் மறைபுண ராரியமென் மாதராள்
தொடர்புறுவ ளிதுவுமோ? தொன்னிறை யிலனிறை
தொடுகிழமை யுருகலள் கடியகுரல் வாயினள்
சொலன்மிகுந ளவடுணைத் தோள்புணை தழுவலன்
றுனியலென வீரடிப் பாற்குறளை மொழிபுநாற்
றுவரிதழின் வாய்நறாச் சோர்தரத் தமிழ்மொழித்
துணைவியின றம்பொருள் வழுவுதலில் காதலின்
சுவைநிறையு மின்பமார் தோணுகர் கடவுளைத்
✓
தணியுமணை மனனுழை வாழுமவர் மாஞ்சினைய
தளிரடியில் வைகறைத் தாழ்துமெந் தலைகொடு
தகையினின ணங்குமின் கொடியிடையர் புட்கடி
தழலொழிய வெறிகவண் டழனிகர் குருமணி
தலைமைபுனை யிமையவர் கையுறையொ டும்பராய்த்
தழையவரு ளிழிதல்போற் றாழ்கதிர் மலைவருந்
தமியமிட ராரிரு ளிரியமிளிர் குமரவே
டனையினிது காத்துருட் சார்பினைப் பெறுகவே. 1
2ஏனைக்கடவுளர் பலர் காப்பு✓
அறுசீர்க்கழி நெடிலடி யிரட்டை யாசிரியவிருத்தம்
பான்னியம் புதியபுனல் கொள்கலங் குப்புறிய
பொள்ளெனக் குறுகுபறவை
பூம்புகார்ப் பொருநற்கொர் செண்டுகொடை பூண்டுலாப்
புறமுய்த்த காரிவள்ளல்
உன்னிவண் மறைஞாளி யூர்நாடு காள்புதல்வ
னும்பர்வேள் விக்கணுணவெள்
ளும்பலூர்ந் திழிதண்பு ணைக்கிழவன் மாவின்மா
னுழையினாத் தூணங்கையாள்
✓
மன்னிவாழ் கலைஞரடி மன்னர்முடி தாழ்ப்பிக்கும்
வாய்மைநாக் கொம்பர் மகடூஉ
மடிகொண்டு மிடியாது வருவிருந் தோம்புமவர்
மலர்முகனின் வாழ்திருமகள்
கன்னிமா ரெழுவர்முப் பான்மூவ ரிவர்தமைக்
கருதிவழி பாடுசெய்வாம்
கதிரைக்கு ரத்திமாப் பிள்ளையைக் காக்கெனக்
காலைதொறு மாலைதொறுமே.
3முழுமுதற்கடவுள் காப்பு✓
வேறு
பாண்டியர்வ ளர்த்தமுக் கழகத்த மிழ்த்தொண்டு
படுசுவைப் பொதியிலடிகள்
பண்ணன்முத லாயுமிரண்டொழிலு முய்த்தொரேழ்
பாலையாம் கொளுவி நோன்பு
வேண்டியது றக்கமன் செல்விபா லரமகளிர்
வேள்புலமை யருள்வனப்பு
விறலென்றி வற்றைப்பு னைந்துசெப் பியதிறமி
சைந்திசைக் கும்மிசைநயந்
✓
தீண்டியபல் கறையுடிக் குழுமெய்ம்ம றந்திளக
வின்றுறுக லென்றுழுவைமா
னியைபத்து யின்றுடல மூரிவிடு கதிர்காம
வேந்தற்பு ரந்தருளுக
வூண்டிகழு முப்பான்மை யுயிர்தொறருள் வெளியிலின்
பொளிர்திருக் கூத்து நவிலு
மொன்றிரண் டாயுயிரொ டுலகுமாய் வேறுமா
யுடனுமா முண்மைமுதலே. 3