முருகன் App
கதிர்காமப் பிள்ளைத்தமிழ்
சிவங்கை கருணாலய பாண்டியப் புலவர்
மொழிபயிலல்4 / 15
கதிர்காமப் பிள்ளைத்தமிழ் · சிவங்கை கருணாலய பாண்டியப் புலவர்

மொழிபயிலல்

7அறுசீர்க்கழி நெடிலடி யீரிரட்டை யாசிரிய விருத்தம்✓
இகலுமிணை யங்கயற் கண்ணிமக வாய்த்தமிழி
யன்றுபயி லஞ்ஞைசெம்மால்!
எம்மனோர் குடியாள வந்துமக வாய்க்கூத்தி
யற்றின்ப மார்வெள்ளமே!
✓
தொகனனவு கனவுதுயின் மீத்துயின் மீமிசைத்
துயிலிருண்மை மருண்மைதூய்மை
தொடராது பேசாது வாளாதி ருந்தநீ
தொன்றுவெண் குன்றினங்கட்
✓
பகலிரவு மாறப்ப சுந்தபச் சைக்குமறு
பாலின்வெள் ளைக்குநடுவட்
படர்செக்கர் வானன்ன செம்மையே யன்றவர்ப்
பகர்மொழிப கர்ந்தவாற்றை
✓
யகலிடத் தடியேம வாயிரப் பேங்கதிரை
யண்ணலே வாய்மலர்கவே
வம்ம! வப்பாவென்னு மருமறைப் பாயிரம்
கத்தலர வாய்மலர்கவே. 7
8வேறு✓
குறிய மதத்த ரறமெம்பாற்
கூறக் கேட்ட செவிப்புண்ணுங்
கொடாநா ரிரப்போர்க் கடிந்துரைத்த
கொடுஞ்சொற் கேட்டசெவிப்புண்ணுஞ்
✓
சிறிய குடியிற் பிறந்தபழிச்
செல்வர் வறிய புலவர்தமைச்
செருக்கி யிழிப்பக் கேட்டிருந்த
தீயூழ் படைத்த செவிப்புண்ணும்
✓
நறிய வமிழ்திற் றமிழ்கேடு
நண்ணப் புறஞ்சொல் வழக்காறு
நாளுங் கலந்து வரல்கேட்டு
நனிசீ வடியுஞ் செவிப்புண்ணு
✓
மறிய வொழியக் கதிரமலை
யழகே! யமிழ்தம் பொழிகவே
யம்மா! வப்பா! வென்னுஞ்சொல்
லமிழ்தம் பொழிக பொழிகவே. 8
9வேறு✓
மலரவ னான்மறை யோதக் கல்லான்
மரநிழ லமிர்தென்னன்
வாய்மையை நால்வர்க் கோதவு ரைக்கும்
மன்பே ராசிரிய!
✓
புலரியி னிமையோர் தொழுகதிர் காமா!
புகலுரை நிற்குரையேம்
பொலிசுவை யொழுகுதல் பருகிய கேட்பேம்
புகழு மைப்பிள்ளா
✓
யுலகினி லேனைய வுயிர்மெய் யுயிர்ப்ப
வுரலிடை யாப்புண்டோ
னூதுங் குழலிசை யாழிசை கைப்ப
வுலர்மா முங்குழைய
✓
வலரன செந்நா வரசைய ழைத்தா
யஃதெங் ஙனமருளே
யண்பே யார்தமை நுந்தைய ழைத்தா
னஃதெங் ஙனமருளே. 9