முருகன் App
கதிர்காமப் பிள்ளைத்தமிழ்
சிவங்கை கருணாலய பாண்டியப் புலவர்
காப்பு1 / 15
கதிர்காமப் பிள்ளைத்தமிழ் · சிவங்கை கருணாலய பாண்டியப் புலவர்

காப்பு

செய்யுட் காப்பு அறுசீர்க்கழி நெடிலடி யிரட்டை யாசிரிய விருத்தம் (கலிப்பா)✓
பூமேவு சிவசெஞ்சு டர்த்தவழு மிளவெயில்பொ
ரப்பிணிமு றுக்குடைந்து
புள்ளார வாரிப்ப நெகுமுளரி யம்போது
புய்த்தொரும ருப்பின்முக்கி
னேமார மோப்பமுற் றெம்முயிர்க் குளனணையி
கப்பநனி திரைபுடைபெயர்ந்து
திழுமெனவ ருட்கடாங் கலுழிசுர வாநிற்ப
வீர்ம்பரிவு நீர்குடைவுழி
திருமுத்தநாயனார் காப்பு✓
மாமால்வி டைக்களிறு பிடிமாலு மழமுதுவ
யக்குறுந டைக்குழவிவான்
மதிமுடிக் கவினவோ மோமெனப் பெயர்கூயின்
மன்றவோ மோமென்றுவந்தி
யாமீயு மிருவினைக் கவளமுண் டுலவுதன்
யாணரடி மாணநினைதும்
யாபன்னி ரண்டுக்கைக் கதிர்காம மான்புணரும்
யானையின் றமிழ்பொலியவே.