முருகன் App
கதிர்காமப் பிள்ளைத்தமிழ்
சிவங்கை கருணாலய பாண்டியப் புலவர்
பூணணிதல்14 / 15
கதிர்காமப் பிள்ளைத்தமிழ் · சிவங்கை கருணாலய பாண்டியப் புலவர்

பூணணிதல்

✓
செம்புலமு ழாநிற்கு மைந்துமலி புனவன்றெ
விட்டக்கொ டிச்சிகொடுபோந்
தினையினது வெய்துநெய்ப் பாற்பொங்க
லென்றியிடைத்
திறவாது கண்முகைத்துத்
தம்புலமி றந்தபழ வேங்கையின்ம ராடியின்
றண்ணிழற் குளிர்தூங்குறுஞ்
சான்றோர்ப்ப ணிந்தவர்தம் வாய்ப்பெய்த ருத்தித்த
ழைக்குங்க திர்க்காமனே!
யும்பரொரு வர்க்குமில் கட்டழகு னக்குண்டு
கப்பிதற் கழகுமுண்டோ?
வொப்பனைசெ யக்காமு றும்பேதை மைக்குணனொ
ழித்தலுமெ மக்குளுண்டோ?
விம்பரது பொழுதறிபொ றிப்பூட்டு கைப்பூட்டி
ணைப்பொலந் தொடிபூண்கவே
யிறைவ! கமு கங்கமுத் தியையுமுத் தாரமொடி
மைப்பொலங் கொடிபூண்கவே.
38வேறு✓
வயிரம் பதித்துத் தெருளுள்ளம்
வளையவ ளைக்கு நரன்னெகிழம்
வள்ளிக் கொடிகண் மணிபதிக்கு
மார்பிற்ப தக்க முகிலூர்தி
செயிரின் றியமும் மணிக்கோவை
தெளிநான் முகனான் மணிமாலை
தேரிள வன்மா ரொன்பதின்மர்
திகழ்ந்த வொன்பான் மணிமாலை
தயிருண் டோடிய நல்லம்மான்
றந்த துயல்பன் மணிமாலை
தனியாண் பால்பெண் பாலொருவர்
சாத்தும் புன்னகை மணிமாலை
யுயிரின் புறுகதிர் மலைக்குமரா!
வுணர்வு திருடப் புனைந்தருளே
யுலகின யணியும் நின்வடிவ
முரவோர் வருடப் புனைந்தருளே.
39வேறு✓
கண்ணிற் கணிகண் ணோடுதன் மாந்தர்
காண்டக வுரைவினவுங்
கல்விக் கணிபொருள் கசடற, மொழிதல்
கருதற் கணியருளே
மண்ணிற் கணிகதிர் காமக், கோட்ட
மதிநூற் கணியுவமம்
மன்பெரு மைக்கணி பொறையே மனையற
மாட்சிக் கணிமகவே
யெண்ணிற் சால்பிற் கணிநா ணுடைமை
யிளைஞர்க் கணிபணிவே
யெங்கண்மு டிக்கணி நின்றிரு வடியே
யெழுதரு மழமுருகே!
விண்ணிற் கணிநீ நின்றிரு மெய்க்கணி
வினையேம் பொற்பணியே
வேசறு மடியார் விழிவாய் பருகவி
துத்தணர் பொற்பணியே.