முருகன் App
கதிர்காமப் பிள்ளைத்தமிழ்
சிவங்கை கருணாலய பாண்டியப் புலவர்
சிறுதேருருட்டல்13 / 15
கதிர்காமப் பிள்ளைத்தமிழ் · சிவங்கை கருணாலய பாண்டியப் புலவர்

சிறுதேருருட்டல்

சிறுதேர்ப்பருவம்
34வேறு✓
திருவேங்க டக்கோடு வடவரைப் பாவுடைய
செந்தமிழ் வளநாடதன்
றென்வரைக் கதிரக்கு றுஞ்சோலை கெழுமுஞ்செ
ழுங்கதிரை யம்புரவல!
பெருநாளு மாடியந் திங்களின் றேநிற்பி
றப்பித்த வான்கங்கையாள்
பீடுபெறு முகமதியு நகைநிரம் பிற்றுப்பி
றங்குதிரு நீற்றுவெள்ள
மொருவாம லரகரசி வாவென்னு மார்ப்பொலியு
றங்குமா லினையெழுப்ப
வொருகோடி கப்புரவி னக்கிலகு மெய்க்குறிப்
புன்னுமுவர் தம்மிழப்பத்
தெருவோதை யயிலயிற் றிருவிழாப் பூமழைச்
சிறுதேரு ருட்டியருளே
தேடுமுழு மாணிக்க மே! குணக் குன்றமே!
சிறுதேரு ருட்டியருளே.
35எழுசீர்க்கழி நெடிலடி யிரட்டை யாசிரிய விருத்தம்✓
மாயாக் களிமண் ணியனால் வாய்மை
வாய்ந்துகொ டிஞ்சியி மிழ்சிறுதேர்
மடனுயி ரச்சின் னிருவினை யீருருண்
மாறிக் கோத்து மருளுமவா
வீயா வாணி செருகிவெ றும்பாழ்
வெட்டவெ ளிக்கண ருட்கையினால்
வினைபல வினைதர வீர்த்துமு ருட்டியும்
விளையா டும்முனை வன்புதல்வா!
பேயா மதமுறு கோள்களெ லாமுறை
பிறழ்புரு ளப்பயி லூராண்மைப்
பேராண் மைத்தமி முரசிய லாழி
பெட்பவொ ராழையொ டுருளவொளி
சீயாக் கதிர்கா மப்புக முருளச்
சிற்றில் சிதையவு ருட்டுகவே
சிறியோ ரீட்டிய திருவில் பொருள்பொற்
சிறுதே ருருளவு ருட்டுகவே.
36அறுசீர்க்கழி நெடிலடி யிரட்டையாசிரிய விருத்தம்✓
திருவாவி நன்குடிதி ருப்பருங் குன்றமிகு
தென்குன்று தொறுமேரகஞ்
சேக்கையலை வாயினிய பழமுதிர் சோலையித்
திண்பாடி வீடாறுமே
யுருவாகு மாறகக் களமாவை யாறெழுத்
தோராறு பேற்றுமுகமு
மொழுகுபன்னிருகண்மடையாறருள்புறம்பொசிய
வோவாவி ராறுபடையும
மருவாம லீராறு தாடொடுகை கன்றவார்
வட்டுடைவ னப்பசையவும்
மாமுனிவர் கண்டவெளி மட்டுமிக் கதிர்காம
மறுகுதொறு முள்ளந்தொறுஞ்
செருவீறு சேவலங் கொடியாட நிற்குமஞ்
சிறுதேரு ருட்டுவாழி
திருவாள ரீழவள நாடர்கொணர் பொன்மணிச்
சிறுதேரு ருட்டுவாழி.