முருகன் App
ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்
அறுமுகவா காத்திடுவீர்9 / 20
ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்

அறுமுகவா காத்திடுவீர்

ராகம்: மோஹனம்
✓
அறுமுகவா காத்திடுவீர் அமரர்தலைவா காத்திடுவீர்
என் அஹங்காரமுகமகற்றி அறிவொளியா யிருந்தும்
முருகா வெனைக்காக்க வேல்கொண்டு வந்திடுவீர்
பாபத்தைப் பொசிக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
ஓம்ஸௌம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம்க்லீம் என்றும்
க்லௌம் ஸௌம் நமஹவென்று சேர்த்திட்டா நாள்தோறும்
ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திட்டா
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி
ஒருமனத் தோடுநீ உருவையும் ஏத்திட்டா
முருகனின் மூலமிது முழுமனத்தோ டேத்திட்டால்
மும்மல மகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்
முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்லவேண்டாம்
முருகனின் இருப்பிடமே முக்தித்தல மாகுமப்பா
ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே
இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு
மூலமதை ஏத்துவோர்க்குக் காலபய மில்லையடா
காலனை நீஜயிக்க கந்தனைப் பற்றிட்டா
சொன்னபடி செய்தால் சுப்ரமண்ய குருநாதன்
தன்னொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்
ஜெகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
மூலத்தை நீஜபித்தே முக்தனு மாகிட்டா
அக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில்
எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும்
மூவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்
பூவுலகில் இணையற்ற பூஜ்யனு மாவாய்நீ
கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா
கோடிகாணச் சொன்னதைநீ நாடிடுவாய் மனமே
ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே
வேதாந்த ரகசியமும் வெளியாகு முன்னுள்ளே
வேத சூக்குமத்தை விரைவாகப் பற்றிடலாம்
சுப்ரஹ் மண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட்பெருஞ் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே
அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய்
சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான்