முருகன் App
ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்
ஸ்கந்தா சரணம்2 / 20
ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்

ஸ்கந்தா சரணம்

ராகம்: நாட்டை
✓
ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்
சரவணபவ குஹா சரணம் சரணம்
குருகுஹா சரணம் குருபரா சரணம்
சரண மடைந்திட்டேன் கந்தா சரணம்
தனைத்தா னறிந்து நான் தன்மயமாகிடவே
ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே
தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர்
அவதூத ஸத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்
அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே
அறம்பொரு ளின்பம் வீடுமே தந்தருள்வாய்
தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுரு நாதா
சண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ
காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா
போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா
போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி
போற்றி போற்றி முருகா போற்றி
ஆறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய்
தகப்பன் சாமியேஎன் இதயத்துள் தங்கிடுவாய்
ஸ்வாமிமலை தனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்