முருகன் App
ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்
நின்னையே நான்10 / 20
ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்

நின்னையே நான்

ராகம்: அடாணா
✓
நின்னையே நான் வேண்டி நித்தமும் ஏத்துகிறேன்
மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளேநீ
வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறி வாகவேநீ
பகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா
பகுத்தறி வானகந்தன் பரங்குன்றில் இருக்கின்றாய்
பழனியில் நீயும் பழம்ஜோதி யானாய்நீ
பிரமனுக் கருளியவா பிரணவப் பொருளோனே
பிறவா வரமருளி பிரம்மமய மாக்கிடுவாய்
திருச்செந் தூரில்நீ சக்திவேல் தாங்கிவிட்டாய்
பழமுதிர் சோலையில் பரஞ்சோதி மயமானாய்
சுவாமி மலையிலே சிவசுவாமிக் கருளியநீ
குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டோய்
ஸ்கந்த கிரியைநீ சொந்தமாக்கிக் கொண்டனையே
ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே
பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய்
பிறவாமை என்கிற பெருவரம்நீ தந்திடுவாய்
தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்
எந்த நினைப்பையும் எரித்துநீ காத்திடுவாய்
ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்
சரணமடைந்திட்டேன் சடுதியில் வாருமே
சரவண பவனே சரவண பவனே
உன்னரு ளாலேநான் உயிரோ டிருக்கின்றேன்
உயிருக் குயிரானகந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா