முருகன் App
ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்
ஸ்கந்த குருநாதா7 / 20
ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்

ஸ்கந்த குருநாதா

ராகம்: ஷண்முகப்ரியா
✓
ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்
தாளினைப் பிடித்தேன் தந்திடு வரமெனக்கு
திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய்
சத்ரு பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு
கிழக்குத் திசையிருந்து க்ருபாகரா காப்பாற்றும்
தென்கிழக்கு திசையிருந்து தீனபந்தே காப்பாற்றும்
தென்திசையிலு மென்னைத் திருவருளால் காப்பாற்றும்
தென்மேற் கிலுமென்னைத் திறல்வேலால் காப்பாற்றும்
மேற்குத் திக்கிலென்னை மால்மருகா ரக்ஷிப்பாய்
வடமேற் கிலுமென்னை மயிலோனே ரக்ஷிப்பாய்
வடக்கிலென்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்
வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே