முருகன் App
ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்
கவலையைவிட்டு நீ18 / 20
ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்

கவலையைவிட்டு நீ

ராகம்: காபி
✓
கவலையைவிட்டு நீ கந்தகுரு கவசமிதை
இருந்த படியிருந்து ஏற்றிவிடு ஏற்றினால்
தெய்வங்கள் தேவர்கள் சித்தர்கள் பக்தர்கள்
போற்றிடுவர் ஏவலுமே புரிந்திடுவர் நிச்சயமாய்
ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் பேயோட்டும்
அஞ்ஞானமு மகற்றி அருள்ஒளியும் காட்டும்
ஞான ஸ்கந்தகுரு நானென்று முன்னிற்பன்
உள்ளொளி யாயிருந்து உன்னிலவ னாக்கிடுவன்