முருகன் App
ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்
சிவகுரு நாதா3 / 20
ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்

சிவகுரு நாதா

ராகம்: சகானா
✓
சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை
அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்
திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே
ஆறுமுக ஸ்வாமியுன்னை அருட்ஜோதியாய்க் காண
அகத்துள்ளே குமரா நீ அன்புமயமாய் வருவாய்
அமரத் தன்மையினை அனுக்ரஹித் திடுவாயே
வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய்
வேல்கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே
தேவரைக் காத்த திருச்செந்தி லாண்டவனே
திருமுருகன் பூண்டியிலே திவ்யஜோதி யானகந்தா
பரஞ்ஜோதி யுங்காட்டி பரிபூர்ண மாக்கிடுவாய்
திருமலை முருகாநீ திடஞான மருள்புரிவாய்
செல்வமுத்துக் குமரா மும்மல மகற்றிடுவாய்
அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே
அருணாசலக் குமரா அருணகிரிக் கருளியவா
திருப்பரங் கிரிகுஹனே தீர்த்திடுவாய் வினைமுழுதும்
திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்
எட்டுக்குடிக் குமரா ஏவல்ப்பில்லி சூனியத்தை
பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டுவிரட்டிடுவாய்
எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே
எங்கும் நிறைந்த கந்தா எண்கண் முருகாநீ
என்னுள் ளறிவாய் நீஉள்ளொளியாய் வந்தருள்வாய்
திருப்போரூர் மாமுருகா திருவடியே சரணமய்யா
அறிவொளியாய் வந்துநீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்