முருகன் App
ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்
ஸ்கந்தகுரு கவசமிதைக்17 / 20
ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்

ஸ்கந்தகுரு கவசமிதைக்

ராகம்: கானடா
✓
ஸ்கந்தகுரு கவசமிதைக் கருத்திருத்தி ஏற்றுவீரேல்
கர்வம் காமக்ரோதம் கலிதோஷ மகற்றுவிக்கும்
முன்செய்த வினையகன்று முருகனருள் கிட்டிவிடும்
அறம்பொருள் இன்பம்வீடு அதிசுலப மாய்க்கிட்டும்
ஆகாரம் சீலமுடன் ஆதிநேம நிஷ்டையுடன்
கள்ளமிலா வுள்ளத்தோடு கந்தகுரு கவசந்தன்னை
சிரத்தா பக்தியுடன் சிவகுமர னைநினைத்துப்
பாராயணம் செய்வீரேல் பார்க்கலாம் கந்தனையும்
கந்தகுரு கவசமிதை மண்டலம் நிஷ்டையுடன்
பகலிரவு பாராமல் ஒருமனதாய்ப் பகருவீரேல்
திருமுருகன் வேல்கொண்டு திக்குகள் தோறும்நின்று
காத்திடுவான் கந்தகுரு கவலையில்லை நிச்சயமாய்
ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியேநீ
கந்தகுரு கவசந்தனை ஓதுவதே தவமெனவே
உணர்ந்துகொண்டு ஓதுவையேல் உனக்குப் பெரிதான
இகபர சுகமுண்டாம் எந்நாளும் துன்பமில்லை
துன்பம் அகன்றுவிடும் தொந்திரைகள் நீங்கிவிடும்
இன்பம் பெருகிவிடும் இஷ்டசித்தி கூடிவிடும்
பிறவிப் பிணியகற்றி ப்ரம்மநிஷ்டை யும்தந்து
காத்து ரக்ஷிக்கும் கந்தகுரு கவசமுமே