முருகன் App
ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்
சத்தியம் வேறல்ல16 / 20
ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்

சத்தியம் வேறல்ல

ராகம்: சுப பந்துவராளி
✓
சத்தியம் வேறல்ல ஸ்கந்தகுரு வேறல்ல
ஸ்கந்தகுரு வேசத்தியம் சத்தியமே ஸ்கந்தகுரு
சத்தியமாய்ச் சொன்னதை சத்தியமாய் நம்பியேநீ
சத்தியமாய் ஞானமாய் சதானந்த மாகிவிடு
அழிவற்ற ப்ரம்மமாய் ஆக்கிவிடுவான் முருகன்
திருமறைகள் திருமுறைகள் செப்புவதும் இதுவேதான்
ஸ்கந்தகுரு கவசமதை சொந்தமாக்கிக் கொண்டுநீ
பொருளுணர்ந்து ஏத்திடப்பா பொல்லாப்பு வினையகலும்
பிறவிப் பிணியகலும் பிரம்மா னந்தமுண்டு
இம்மையிலும் மறுமையிலும் இமையருன்னைப் போற்றிடுவர்
மூவருமே முன்னிற்பர் யாவருமே பூஜிப்பர்
அனுதினமும் கவசத்தை அன்புடன் ஏத்திடப்பா
சிரத்தா பக்தியுடன் சிந்தையொன்றிச் செப்பிடப்பா
கவலைய கன்றிடுமே கந்தனருள் பொங்கிடுமே
பிறப்பும் இறப்பும் பிணிகளும் தொலைந்திடுமே
கந்தன் கவசமே கவசமென்று உணர்ந்திடுவாய்
கவசம் ஏத்துவீரேல் கலியை ஜெயிக்கலாம்
கலியென்ற அரக்கனைக் கவசம் விரட்டிடுமே
சொன்னபடி செய்து சுகமடைவாய் மனமேநீ
ஸ்கந்தகுரு கவசத்தைக் கருத்தொன்றி ஏத்துவோர்க்கு
அஷ்டைஸ் வர்யந்தரும் அந்தமில்லா இன்பந்தரும்
ஆல்போல் தழைத்திடுவன் அறுகுபோல் வேரோடிடுவன்
வாழையடி வாழையைப்போல் வம்சத்தைப் பெற்றிடுவன்
பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்திடுவன்
சாந்தியும் சௌக்யமும் ஸர்வமங்களமும் பெருகிடுமே.