முருகன் App
ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்
படர்ந்த அன்பினைநீ5 / 20
ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்

படர்ந்த அன்பினைநீ

ராகம்: ஆனந்தபைரவி
✓
படர்ந்த அன்பினைநீ பரப்பிரம்மம் என்றனையே
உலகெங்கு முள்ளது ஒருபொருள் அன்பேதான்
உள் ளுயிராகி இருப்பது மன்பென்றாய்
அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன்
அன்பே ஓமெனும் அருள்மந்திர மென்றாய்
அன்பை உளத்திலே அசையாது அமர்த்திடுமோர்
சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்
வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ
யாவர்க்கும் இனியன்நீ யாவர்க்கும் எளியன்நீ
யாவர்க்கும் வலியன்நீ யாவர்க்கு மானோய்நீ
உனக்கொரு கோயிலைஎன் அகத்துள்ளே புனைவேனே
சிவசக்திக் குமரா சரணம் சரணமய்யா
அபாயம் தவிர்த்து தடுத்தாட் கொண்டருள்வாய்
நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும்
பகைமையை அகற்றி அபயமளித் திடுவீர்
உணர்விலே ஒன்றி என்னை நிர்மல மாக்கிடுவாய்
யானென தற்றமெய் ஞானம் தருவாய்நீ
முக்திக்கு வித்தான முருகா கந்தா