முருகன் App
ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்
ஸ்கந்தகுரு கவசபலன்20 / 20
ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்

ஸ்கந்தகுரு கவசபலன்

ராகம்: மத்யமாவதி
✓
ஸ்கந்தகுரு கவசபலன் பற்றறுத்துப் பரம்கொடுக்கும்
ஒருதரம் கவசமோதின் உள்ளழுக்குப் போகும்
இருதரம் ஏற்றுவீரேல் எண்ணியதெலாம் கிட்டும்
மூன்றுதர மோதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு
நான்முறை யோதி தினம் நல்லவரம் பெறுவீர்
ஐந்துமுறை தினமோதி பஞ்சாக்ஷரம் பெற்று
ஆறு முறையோதி ஆறுதலைப் பெற்றிடுவீர்
ஏழுமுறை தினமேத்தின் எல்லாம் வசமாகும்
எட்டுமுறை ஏத்தில் அட்டமா ஸித்திகிட்டும்
ஒன்பது தரமோதின் மரண பயமொழியும்
பத்துதர மேத்திநித்தம் பற்றறுத்து வாழ்வீரே
கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக்
கந்தகுரு கவசமோதி கந்தகிரி ஏறிவிட்டால்
முந்தை வினையெல்லாம் கந்தன் அகற்றிடுவன்
நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையுமே கைகூடும்
கன்னிமார் ஓடைநீரைக் கைகளிலே நீஎடுத்துக்
கந்தனென்ற மந்திரத்தைக் கண்மூடி யுருவேத்தி
உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டிட்டால்
சித்த மலமகன்று சித்தசுத்தியும் கொடுக்கும்
கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே
கண்டு வழிபட்டு கந்தகிரி யேறிடுவீர்
கந்தகிரி யேறிஞான ஸ்கந்தகுரு கவசமிதை
பாராயணம் செய்துலகில் பாக்யமெலாம் பெற்றிடுவீர்.