முருகன் App
ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்
கண்கண்ட தெய்வமே12 / 20
ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்

கண்கண்ட தெய்வமே

ராகம்: தன்யாஸி
✓
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
ஆறுமுக மானகுரோ அறிந்திட்டேன் உன் மஹிமை
இக்கணமே வருவாய் என்ஸ்கந்த குருவேநீ
என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே
அரைக் கணத்தில் நீயும் ஆடிவரு வாயப்பா
வந்தெனைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ
அன்புத் தெய்வமே ஆறுமுக மானவனே
சுப்ரஹ் மண்யனே சோகம் அகற்றிடுவாய்
ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய்நீ
ஞான தண்டபாணியே என்னை ஞானபண்டித னாக்கிடுவாய்
அகந்தையெலா மழித்து அன்பினை ஊட்டிடுவாய்
அன்பு மயமாக்கி ஆட்கொள்ளுவையப்பா
அன்பைஎன் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு
அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய்
உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே
உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்
எல்லையில்லாத அன்பே இறைவெளி என்றாய்நீ
அங்கிங் கெனாதபடி எங்கும் அன்பென்றாய்
அன்பே சிவமும் அன்பே சக்தியும்
அன்பே ஹரியும் அன்பே பிரம்மனும்
அன்பே தேவரும் அன்பே மனிதரும்
அன்பே நீயும் அன்பே நானும்
அன்பே சத்தியம் அன்பே நித்தியம்
அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம்
அன்பே மௌனம் அன்பே மோக்ஷம்
அன்பே பிரம்மமும் அன்பே அனைத்துமென்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லையென்றாய்
எங்கும் நிறைந்த அன்பேஎன் குருநாதனப்பா
அன்பில் உறையும் அருட்குரு நாதரேதான்
ஸ்கந்தாஸ் ரமத்தில் ஸ்கந்தகுரு வானான்காண்
மூவரும் தேவரும் முனிவரும் போற்றிடவே
ஸ்கந்தாஸ் ரமந்தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்
ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு
இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள்குரு
எல்லை யில்லாதஉன் இறைவெளியைக் காட்டிடுவாய்
முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவே
நம்பினேன் உன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோ
உனையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன்