முருகன் App
ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்
ஏழையைக் காத்திடப்பா15 / 20
ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்

ஏழையைக் காத்திடப்பா

ராகம்: பிலஹரி
✓
ஏழையைக் காத்திடப்பா ஏத்துகிறேன் உன்நாமம்
உன்னையன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
கந்தனென்ற பேர்சொன்னால் கடிதாக நோய்தீரும்
புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியை
திருவடியை நம்பினேன் திருவடி சாக்ஷியாக
புவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியேகேள்
நின்நாமம் ஏத்துவதே நான் செய்யும் தவமாகும்
நாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின்நாமம்
முருகா முருகாவென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்
உள்ளும் புறமும்ஒரு முருகனையே காண்பேன்
அங்கிங் கெனாதபடி எங்குமே முருகனப்பா
முருகன் இலாவிட்டால் மூவுலக மேதப்பா
அப்பப்பா முருகனின் அருளே உலகமப்பா
அருளெலாம் முருகன் அன்பெலாம் முருகன்
ஸ்தாவர ஜங்கமமாய் ஸ்கந்தனாய் அருவுருவாய்
முருகனாய் முதல்வனாய் ஆனவன் ஸ்கந்தகுரு
ஸ்கந்தா ஸ்ரமமிருக்கும் ஸ்கந்தகுரு அடிபற்றிச்
சரணம் அடைந்தவர்கள் ஸாயுஜ்யம் பெற்றிடுவர்
சத்தியம் சொல்கின்றேன் சந்தேகமில்லையப்பா
வேதங்கள் போற்றிடும் வடிவேலன் முருகனைநீ
சந்தேக மில்லாமல் சத்தியமாய் நம்பிடுவாய்
சத்திய மானதெய்வம் ஸ்கந்த குருநாதன்
சத்தியம் காணவேநீ சத்தியமாய் நம்பிடப்பா