மயூரகிரி உலா
சு.மு. இராமசுப்பிரமணியன் செட்டியார்
அரிவை13 / 16
மயூரகிரி உலா · சு.மு. இராமசுப்பிரமணியன் செட்டியார்
அரிவை
273✓
ளன்ன திருத்தெருவி லாரமுத மாமரிவை
பன்னுகச்சி யேகம் பரநாதர் - மன்னிவளர்
274✓
சூத மரம்வளருந் தோகைக் களகண்ட
மாதேவ னஞ்செழுத்து வாழ்வுறாப் - பாதகரி
275✓
னெஞ்ச மனையகரு நீள்குழலாள் சம்புகள
நஞ்சனைய கண்ணினா னாடுமுகம் - பஞ்சமலர்ப்
276✓
பாணத்து ளொன்றனைய பண்பினா ளாடியெனக்
காணத் தகுஞ்செங் கபோலத்தாள் - மாணத்தன்
277✓
வேலைவிட முண்டநாள் விண்ணோ ரினிதுண்ட
மாலமுத மொத்தசுவை வாய்மொழியா - ளாலடியன்
278✓
முப்புரந்தூ ளாக முதிர்நாண் வளைத்தநாள்
செப்புநகை யன்ன சிறுநகையா - ளப்பிலுறு
279✓
சங்கன்ன கண்டத்தாள் சார்சுச் சணிந்துபொன்போற்
பொங்கு பசலை புகுந்துதிரண் - டங்கத்தைச்
280✓
சின்ன மெனவிசைக்குஞ் செம்முலையாள் சேடியர்க
ளுன்னுபலர் நிற்க வுயிர்ச்சேடி - தன்னையழைத்
281✓
தோங்கிய செய்குன்றி னுள்ளிருத்தி யாவலொடு
மாங்கவளை மஞ்சனநீ ராட்டியே - வீங்குவிரைச்
282✓
சந்தனத்தைப் பூசினால் தன்னா பரணமெலா
மந்தமிக்க தென்ன வவட்கணிந்தாள் - பைந்தொடியைக்
283✓
கட்டி யகமகிழ்ந்தாள் கைத்தாம்பு லங்கொடுத்தாள்
மட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்த்தினாள் - கிட்டப்போய்
284✓
வஞ்சியே யென்றன் மனத்தில் விளைகருத்தைப்
பஞ்சாக நான்படும் பாடதனைக் - கஞ்சமுக
285✓
மாறுடையான் பாலே யறைவா யெனவுரைத்தாள்
மாறுசொலாச் சேடியுமம் மங்கையைப்பார்த் - தூறுமுகப்
286✓
பெம்மான்மா யோன்மருகன் பேருலா நாளையிவ்வா
றம்மவரு வானென் றறைந்திட்டாள் - கொம்மைமுலை
287✓
யாங்கதுகேட் டல்குல்வே ளாசை யினும்விரிய
வீங்குமுலை விண்ணடைய மெய்ம்மயிர்க்கூச் - சோங்கியே
288✓
மன்னிய காமம் வளர்காலை மாலைவர
யென்ன மறலிநிற மிந்நிறமோ - மன்னுமவ
289✓
னென்ற னுயிர்குடிக்க விங்கு பொருந்தினனோ
குன்றவேள் சிந்தை குடியிருக்கத் - தென்றல்வேள்
290✓
வில்லம்பென் னாகத்தில் மேவுவதெ னென்றுரைப்பாள்
வல்லம் புலியின் வளரொளியை - நல்லம்பாச்
291✓
சுட்டதெனக் கூறுவாள் தோன்ற னுதலழலாற்
சுட்டமதன் வாளி தொடுப்பதெனோ - விட்டப்
292✓
பொதிய மலையிறந்த பூங்காற்றென் மேனி
யுதிர மருந்துவதெ னும்பர் - பதியினிட
293✓
மென்னிலைமை சென்றுரைப்பீ ரென்றுரைப்பாள் சேடியரை
யின்னனைய துன்பத் திளையாளுங் - கொன்னெடுவேல்
294✓
வேந்தன் றனதடியே மெய்ப்புணையாக் கொண்டிரவா
மேந்தற் கடலை யிகழ்ந்திகழ்ந்து - நீந்தினாள்
295✓
காலை யெழுந்து கடன்கள் முடித்திறைவன்
மாலை விரும்பி மறுகடைந்தாள் - வேலையுன்
296✓
நாடுதிருத் தேர்கண்டு நாளையரு மென்றுசொன்ன
சேடி யினைநினைத்துச் சேவித்தா - னாடினாள்
297✓
பாடினா ளண்ணலிரு பாதபங்க யஞ்சிரத்துச்
சூடினாள் தோத்திரங்கள் சொல்லினா - னாடியவன்
298✓
செய்யதிருத் தோள்சேரச் சிந்தித்தா ளிவ்வமய
மையன் றிருத்தே ரகற்றினான் - நையுமிடை