மயூரகிரி உலா
சு.மு. இராமசுப்பிரமணியன் செட்டியார்
பேதை9 / 16
மயூரகிரி உலா · சு.மு. இராமசுப்பிரமணியன் செட்டியார்
பேதை
161✓
பருவச் சிறுபேதை பார்மகன்றன் பாண
மருவப் பெறாத மடமா - னுருவினி
162✓
லொப்பற்ற காளையர்க ளுள்ளமுறா மாமயிலாள்
செப்பழகோர் தெய்வவுருக் கொண்டென்ன - விப்புவியி
163✓
லேயுந்ததிருப் பாவை யினியமல ரோதிமநீர்
வாய்ந்த வளைமருவா வண்டரள - மாய்ந்தமலர்
164✓
பூத்தறியா வஞ்சி புகழு மணிச்சுரங்கம்
வாய்த்தறி யாதவிள மாணிக்க - மேத்தருசீர்க்
165✓
கொம்பறாத் தேறல் குறைவில் மருக்கொழுந்
தம்பறா மாரனெடா வங்கன்னல் - வம்பறாச்
166✓
சோலை பொதியமலை தோன்று முயர்தென்றல்
வேலையிடைத் தோன்றாத விண்ணமுதம் - பாலையுணப்
167✓
பாவையினைத் தோன்றாப் பயோதரத்திற் சேர்த்தணைப்பா
ளாவலுடன் சித்திரவா ழைக்கனியைத் - தாவுறுசீர்
168✓
வன்னிக்குக் காட்டி மகிழ்ந்துண்ணச் சொல்லுவாள்
துன்னு புளகத்துத் தோன்றுருவைத் - தன்னுடனே
169✓
சிற்றி லமைத்துத் தெருவில் விளையாட
வுற்றணை வாயென் றுரைசெய்வாள் - கொற்றமுலைப்
170✓
பாலருந்து கின்றநிலை பாவைமருந் தூட்டினாற்
பாலருந்து மென்று பகருவாள் - ஞாலமிசைக்
171✓
கூர்த்த மதியிலார் கொண்டுசெயு நற்றொழில்போ
லார்த்து முடியா வளகத்தாள் - தீர்த்தத்துப்
172✓
பங்கயங்க ளென்னப் பகரு மிணைவிழியாள்
திங்களென வோதுந் திருமுகத்தாள் - தங்குழ
173✓
லென்ன விசைக்கு மிளமழலை வாயினாள்
துன்னுவித்தில் மாமரங்கள் தொக்கதுபோல் - முன்னநெடு
174✓
மால்செவியி னுள்ளே மறைந்தமது கைடவர்போல்
வாலியெய்ய ராமன் மறைந்ததுபோல் - வேலை
175✓
யொளித்தமைநா கம்போ லுமையிறைவன் வேணி
யொளித்த பகீரதிபோ லும்பர் - களிக்குமிறை
176✓
யம்போ ருகத்தொளித்த வாகண் டலன்போல
மொய்ம்பேறத் தோன்றா முலையினாள் - பைம்பொழில்வாய்
177✓
மன்னுகொடிப் பந்தர் மணப்பந்த ராவாவி
யுன்னுமரக் காம்ப லுயர்தீயாத் - தன்னுடைய
178✓
கிள்ளையே வேட்டற் கிரியைசெயு மந்தணராக்
கள்ளையே நெய்யாக் கடிவிரவு - வெள்ளைநிறப்
179✓
புன்னை யரும்பே பொரியாகப் பொற்பாவைக்
குன்னுமணஞ் செய்யு முயர்காலை - மன்னுவேல்
180✓
வேந்தன்வந் தான்றேவ வேழ முவந்தணையுங்
காந்தன்வந் தானென்னுங் காகளமுந் - தாந்தமெனக்
181✓
கிண்ணொலிசெய் பல்லியமுங் கேட்டு முலைத்தாயர்
விண்ணவனைச் சேவிக்க மேவினரால் - புண்ணியத்தாள்
182✓
தாயர் தொழப்பார்த்துத் தானுந் தொழுதிறைஞ்சி
யாயவிவர் சிற்றி லடைந்தனரால் - தூயவென
183✓
சிற்றிற் சிறுசோ றுகந்தோ சிறியனேன்
கற்றகழற் காயாடல் கற்கவோ - சொற்றகைய
184✓
வம்மா னிறைவ னருளு மணிமுருக
னம்மான் மகள்கணவ னாறுமுகப் - பெம்மானிங்
185✓
கேய துரைமி னெனப்புகன்றாள் பேதையுயர்
தாய ரதுகேட்டுத் தையலே - யாயவிதென்
186✓
வேதியர்க ளாகமமா மெய்ந்நூல் முறையேசெய்
கோதி லமுதுண்ணுங் குமரன்றான் - தீதறுநின்
187✓
சில்லடிசிற் காகவிர கு சேருவனோ முத்தொழில்செய்
வல்ல பெருமான் மறைப்பெருமான் - சொல்லுகழற்
188✓
காயாட விங்கண் கடிதி லடைவனோ
வாயிவ்வா றோத வணங்கும்பின் - மேயதற்குக்
189✓
காரணமே தென்னக் கடியுலாப் போந்தானென்
றாரமுடை யாய றைந்தனரால் - பேரமுதம்
190✓
தாவி யிருத்தேறிற் றங்கு மிளையோனை
யாவ னெனக்கேட்டா ளன்னைமார் - தேவரது
191✓
சேனை யிறையென்றார் தெய்வச் சிலம்பைவள்ளி
மானையெவ ரென்றாள் மனையென்றார் - வானயிலை
192✓
யென்னென்றாள் கூர்வடிவே லென்றார் சிகாவளத்தை
யென்னென்றாள் மாமயிலென் றேத்தினா - ரன்னதனைத்
193✓
தத்தையுடன் வைத்துவிளை யாடத் தகவுடைய
வத்தனிடம் வாங்கி யளியுமென்றாள் - கர்த்தனுமவ்
194✓
வாகனமா யூருமிள மாமயிலை யீவானோ
வேகனையே யென்ன விருகணீர் - மாகதிர்கள்
195✓
வீசுந் தரளம்போல் விட்டா ளிறைவனுமவ்
வாசி நெடுவகன்றா னங்கொருத்தி - பேசும்